வடக்கு உள் மாவட்டங்களான வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேபோல வடகடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் கடந்த சில வாரங்களாகவே இரவு நேரங்களில் திடீரென்று மழை பெய்து வருகின்றது. இது அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு தொடரும் அப்படின்னுதான் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று  வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் உருவானகாற்றழுத்த  தாழ்வு பகுதி, இன்னைக்கு ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு பகுதியாக மாறி,  வடமேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகயில் நிலைகொண்டுள்ளது.  இது அடுத்த இரண்டு நாட்களில் ஒடிஷா மற்றும் சத்திஸ்கரை நோக்கி நகர இருக்கிறது.இது இல்லாமல் மேற்கு திசை காற்றினுடைய வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பல இடங்களிலும் மிதமான மழை பெய்து வரும் நிலையில்,  அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை இடியுடன் கூடிய மழையாக தொடரும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரைக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, வெப்பம் சற்று அதிகரித்து காணப்பட்டது.  ஒரு சில இடங்களில் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை  தாண்டி வெயில் பதிவாகியது.  ஆனால் இந்த வெப்பநிலை குறைந்து,  சென்னையில் மிதமான மழை அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு தொடரும். அதே போல தமிழகத்தில் மிதமான மழை அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு தொடரும் அப்படின்னு சொல்லப்பட்டுள்ளது. இப்போதைய  நிலைமையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையாக  தமிழகத்தில் பரவாலாக… டெல்டா மாவட்டம். வடகடலோர மாவட்டங்கள். வட க்கு உள் மாவட்டங்கள். மத்திய மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.