தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ரூபாய் 1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையை தற்போது உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெறும் கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதி முதல் 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கிறது. இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தால் அரசாங்கத்துக்கு ஒரு வருடத்திற்கு 263 கோடிக்கு மேல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.