ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு பால் பாக்கெட் 500 மில்லி 24 ரூபாய்க்கும்,பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும் மற்றும் நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை ஆவின் நிறுவனம் உயர்த்திய நிலையில் ஆவின் ஆரஞ்சு பால் விற்பனை விலை ஒரு லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு 4 இன்று முதல் உயர்வதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்ற வகையில் இன்று  வர உள்ள ஆவினின் அரை லிட்டர் பால் பாக்கெட்டுகளில் விலை 22க்கு பதிலாக 324 என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து ஆவின் நிர்வாகம் கூறுகையில், “இயந்திர கோளாறு காரணமாக பால் பாக்கெட்டுகளில் விலை தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது. விலை உயர்த்தவில்லை” என தெரிவித்துள்ளது.