நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் இன்று  (ஜனவரி.,1) முதல் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் அரிசிகளுக்கு தனித்தனி ரசீதுகளை பொது மக்களுக்கு ஊழியர்கள் வழங்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இதை மீறி பொருட்கள் வழங்கினால் அதற்குண்டான வேறுபாட்டு தொகையினை அரிசிக்கு செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.