தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை பதிவு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி TNSEDஎன்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலமாக ஆசிரியர்களின் வருகை மட்டும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த செயலின் மூலமாக மாணவர்களின் வருகையையும் பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை இந்த செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.