விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அண்ணா திமுகவிலோ, அண்ணா திமுக கூட்டணிகளிலோ,  பாஜக அல்லது பாஜக தலைமையில்  உள்ள கூட்டணி சார்பிலே நிற்கிற வெற்றி ஒவ்வொருவரும் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் நினைப்பான்.

மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வரக்கூடாது. அதுதான் நாம் ஏற்க வேண்டிய சபதம். நம்முடைய உறுதியேற்பு அது தான். BJP வரக்கூடாது. தடுத்தாக வேண்டும். அது எப்படி நாம் ஒரு ஆளு ஓட்டு போட்டு பிஜேபியை வீழ்த்த முடியுமா ? நம்ம ஊர்ல ஒரு ஆளு MPஆக ஜெய்த்துவிட்டால் BJPயை வீழ்த்த முடியுமா ? முடியும்.

இன்றைக்கு முக்கியமான பல கட்சிகள் பிஜேபியில் இருந்து வெளியேறி விட்டன. சொல்லப்போனால் இன்றைக்கு பிஜேபி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சிலர் நடுநிலையில் இருக்கின்ற பெயரால் ஊசலாட்டத்தில் இருக்கிறார்கள்.

மம்தா பானர்ஜி இந்த கூட்டணியில் இருக்கின்றார். மேற்கு வங்கத்தில் அவர்களால் வாலாட்ட முடியாது. பீகாரிலே நிதிஷ்குமார் இருக்கிறார்.  லல்லு பிரசாத் யாதவ் கட்சி இருக்கிறது. அங்கே வாலாட்ட முடியாது.  மகாராஷ்டிராவில் சரத் பாவார் இருக்கிறார்,  சிவசேனா இருக்கிறது.  இந்த கூட்டணியில் டெல்லியில் ஆளுகிற கெஜ்ரிவால் வர மாட்டார் என்று சொன்னார்கள், வந்துவிட்டார்கள். இன்னைக்கு டெல்லியிலும்,  பஞ்சாப்பிலும் அவர் முதலமைச்சர், வந்துவிட்டார்.

கூட்டணியில் இருக்கிறார். தெலுங்கானாவிலே அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆந்திராவிலே அவர்களால் வாலாட்ட முடியவில்லை.  தமிழ்நாட்டில் அவர்களால் வேரூன்ற முடியவில்லை. கேரளாவிலேயே அவர்கள் பகிரங்க முயற்சி செய்து பார்க்கிறார்கள்.

பப்பு வேக வில்லை. கேரளாவில் இடதுசாரிகள் தான் அங்கே ஆட்சி. இல்லைன்னா காங்கிரஸ்தான். அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.கர்நாடகாவில் கொஞ்சம் வேடிக்கை காட்டினார்கள்.  கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட ஓட விரட்டி அடித்து விட்டார்கள், வீழ்த்திவிட்டார்கள் என தெரிவித்தார்.