தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட்டான படங்களை எடுத்துள்ளார். அதோடு கடந்த 2018 காட் செஸ் அண்ட் ட்ரூத் என்னும் ஆபாச படத்தை எடுத்து ஒட்டுமொத்த சினிமா துறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின் தொடர்ந்து அவர் அதே போன்ற படங்களை இயக்க ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இவர் மீது மகேஷ் சந்திர மிஸ்ரா என்பவர் செக் பவுன்ஸ் வழக்கு தொடர்ந்தார். அதன் பின்னர் ரூ.5000 வினைத் தொகையாக செலுத்தி ஜாமீனில் வெளிய வந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 21ம் தேதி நடைபெற்றது.

இந்த விசாரணையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆஜாராகாததால் நீதிபதி அவருக்கு 3 மாதம் பிணியில் வெளிவர முடியாத சிறை தண்டனை வழங்கினார். அதோடு பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 3.72 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஜாமீன் பெற முடியாததால் இயக்குனரை காவல்துறையினர் கைது செய்ய நேரிடும் என்று சூழல் உருவாக்கியுள்ளது. சந்திரபாபு நாயுடு அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவுன் கல்யாண் ஆகியோரை இழிவுபடுத்தும் விதத்தில் அவர்களது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வழக்கில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.