சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உள்ளடக்க படைப்பாளர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதை காட்டுகிறது. @vlogger_lks என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் கடந்த ஜூலை 24 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளைஞர் தனது தந்தையை சித்தூர்கார் ஜெயிலில் விடுவது வரை வீடியோ எடுத்துள்ளார்.

42 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து, இவரை ‘ஆண்டின் சிறந்த வ்லாக்கர்’ என நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர். வீடியோவில், பரோலில் வெளியே வந்த தனது தந்தை மீண்டும் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய கடைசி நாள் என்று வ்லாக்கர் அந்த வீடியோவில் விளக்குகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Lokesh choudhary (@vlogger_lks)

வீடியோவின் தொடக்கத்தில், “என் அப்பா பரோலில் இருக்கிறார், இன்று கடைசி நாள். மாலை 5 மணிக்குள் ஜெயிலுக்கு செல்லவில்லை என்றால், அவர்கள் குற்றவாளி ஆகிவிடுவார். இது அவர்களின் NDPS  வழக்கை பலவீனப்படுத்தி, ஜாமீன் தாமதமாகலாம்” என வ்லாக்கர் கூறுகிறார்.

தனது தந்தை தயாராகி, காரில் ஏறி, சரியாக 5 மணிக்கு ஜெயிலை அடையும் காட்சிகளை பதிவு செய்து, இறுதியாக அவருக்கு ‘குட் பை’ சொல்லி வீடியோ முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, நெட்டிசன்கள், “இதை காப்பி அடித்து காட்டு பார்ப்போம்”, “அங்கிள் டிரக் மாஃபியாவா?”, “ஜெயிலுக்குள் அங்கிளின் ஒரு நாள் வாழ்க்கை வ்லாக் எடு” என கமெண்டுகளால் கலகலப்பாக ட்ரோல் செய்கின்றனர். “இதைத்தான் பார்க்காமல் இருந்தோம்” என ஒரு பயனர் கிண்டலடித்தார்.