தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தோமாட்மண்டியில் தனிநபர்கள் சட்டவிரோதமாக கடந்த சுமார் 30 ஆண்டுகளாக ரூ 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பகுதியை  ஆக்கிரமிப்பு செய்து வந்த நிலையில், இடத்தை மீட்க நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட சட்டப்பூர்வ மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கோர்ட் உத்தரவை மீறி, மூன்று மாதங்களாகியும், ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவில்லை.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டதையடுத்து, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து இன்று நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி,

ஜே.சி.பி., கருவி மூலம், ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து, நகராட்சி நிலத்தை மீட்பதை உறுதி செய்தனர். இந்த நடவடிக்கையின் போது பாலக்கோடு போலீசார், தீயணைப்பு போலீசார் உட்பட 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.