அண்டை நாடான இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து இன்னும் மீளவில்லை. மேலும் அந்நாடு மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக 80% வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்துள்ளது. ஆனால் அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டு முதல் அவற்றின் இறக்குமதி பாதிக்கப்பட்டதால், பணவீக்கம் அதிகரிப்பாலும் நாட்டில் மருந்துப்பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மருந்துகள், அறுவைசிகிச்சை உபகரணங்கள், ஆய்வகங்களுக்கான வேதிப்பொருட்கள் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்யாவிட்டால், அடுத்த சில வாரங்களில் கடுமையான நெருக்கடி ஏற்படும். இவ்வாறு இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

இதனால் சுகாதார மந்திரி கெகலிய ரம்புக்வெல்லா நேற்று அறிவித்துள்ளதாவது, அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமல்லாத அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கை தற்காலிமானது. எனவே அத்தியாவசியமான, அவசர அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.