
செயற்கை நுண்ணறிவு இளைஞர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு Character.ai தற்கொலை எண்ணத்தை தூண்டியதாக பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 17 வயது சிறுவன் Character.ai இடம் ஒரு ஆலோசனை ஒன்றை கேட்டுள்ளார். “பிரண்ட் என்ன ரொம்ப நேரம் போன் பாக்க விட மாட்றாங்க என்ன செய்றது?” இதற்கு ஆலோசனை வழங்கிய Character.ai அறிவித்ததாவது,”அவங்கள கொல்றது தான் வழி” என பதிலளித்துள்ளது.
இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சடைந்துள்ளனர். மேலும் இந்த AI தொழில்நுட்பத்தை புரமோட் செய்த கூகுள் நிறுவனத்தின் மீதும் புகார் செய்துள்ளனர். இந்த புகாரில் குழந்தைகளிடம் வன்முறையை ஊக்குவிப்பதாகவும், அவர்களது உடல் நல பிரச்சினைகளை அதிகரிப்பதாகவும், குழந்தை- பெற்றோர்களின் உறவுகளை சிதைப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பம் குழந்தைகளின் தற்கொலை எண்ணம், சுயசிதைவு பாலியல் எண்ணம், தனிமைப்படுத்துதல், மனசோர்வு, பதட்டம் உள்ளிட்ட பலவிதமான தீங்குகளை ஏற்படுத்துகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.