உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக ஒருவர் புகார் அளிக்கப் போவதாக மிரட்டிய சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நபர் ஒருவர் தனது தொலைபேசி காணாமல் போனதாக அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு போலீசாரை அழைத்துள்ளார்.
View this post on Instagram
ஆனால் போலீசார் அங்கு வருவதற்குள் அவருக்குத் தொலைபேசி கிடைத்துவிட்டது. உதவியதற்காக மகிழ்ச்சியடைந்த அந்த நபர், போலீசாருக்கு இனிப்பு வாங்கிக் கொள்ளுமாறு 500 ரூபாயை அன்பளிப்பாகக் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் காவல்துறை சேவை முற்றிலும் இலவசமானது என்று கூறி அந்தப் பணத்தைப் பெற போலீசார் மறுத்துவிட்டனர்.
இருப்பினும் விடாப்பிடியாக நின்ற அந்த நபர், பணத்தைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்போவதாக மிரட்டியது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த வினோதமான உரையாடல் இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு பொதுமக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
