ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் மட்டும்தான் என்று அம்மாவுக்கே  அந்த பதவி சொந்தம். வேறு யாரும் அமரக்கூடாது என்று தொண்டர்கள்,  பொறுப்பாளர்கள் நாம் அறிவித்திருந்தோமோ,  பிற்காலத்தில் அந்த பதவிக்கு யாரும் வந்த விடக்கூடாது என்று….

பெரியாருக்காக அண்ணா திமுகவை ஆரம்பித்து தலைவர் பதிவை வைத்திருந்தார். அதை அபகரித்தவன் கயவன் கருணாநிதி.  நிரந்தர பொதுச்செயலாளர் என்று அம்மாவுக்காக ஒதுக்கி வைத்திருந்த நிரந்தர பொதுச் செயலாளர் பதவியை அபகரித்தவன் திரு. எடப்பாடி பழனிச்சாமி என்ற கயவன். அப்படி இந்த கயவனிடமிருந்து இந்த கட்சியை மீட்டு மீண்டும் ஒரு தொண்டனுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும்,  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நிரந்தர பொதுச் செயலாளர் என்ற கௌரவத்தை மீட்டு தர நடக்கக்கூடிய போராட்டத்தில் தொண்டனுக்காகவும்,

அம்மாவுக்காகவும், புரட்சித்தலைவர் வகுத்துக் கொடுத்த விதியை காப்பாற்றுவதற்காகவும்,   தலைவருக்காக.. அம்மாவுக்காக… இந்த கட்சிக்கு தொண்டனுக்காக…. உரிமையை மீட்டு…  கௌரவத்தை மீட்டு… சட்டவிதியை மீட்டு கொடுப்பதற்காக நடக்கின்ற போராட்டத்தில் நானும் ஒருவன் என்று சொல்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர்கள் காலத்திலிருந்து விசுவாசம் மட்டுமே பயிரிடப்பட்டு, விசுவாசம் மட்டுமே விளைந்து அறுவடை செய்து கொண்டிருந்த,  இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொறுப்பில் இன்று துரோகத்தை விதைத்து,  அதில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமிக்கு சொல்லுகிறேன். துரோகம் விளைந்தால் அதில் மூழ்கி அழியப் போற முதல் நபர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

நாங்கள் எல்லாம் விசுவாசமாக புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி கட்சியை வளர்த்த தொண்டனுக்காக போராடுகிறோம். நீ விஷத்தை விதைத்து,  பல துரோகத்தை….  நான்கு  அரை ஆண்டு காலம் உன்னை முதலமைச்சரின் அரியணையில் அமைத்தினோம். நானெல்லாம் 2016இல் வெற்றி பெற்று, அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் வரவில்லை என்றால் ? கட்சி ஒன்றாக இணையவில்லை என்றால் ? எடப்பாடி பழனிச்சாமி நான்கு  அரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது.

இப்பொழுது அந்த முதலமைச்சர் பதவியில் அமர்ந்ததின் காரணமாக… முன்னாள் அமைச்சர்கள் என்ற தற்குறிகளை, தன்னை வளர்த்து விட்ட… தன்னை அடையாளம் காட்டிய புரட்சித்தலைவி அம்மாவை புகழ்ந்த சக கால அரசியலில் புகழ்ந்த அந்த தற்குறிகளெல்லாம்…. சமகால அரசியல்வாதியான எடப்பாடியின்  காலில் விழுந்து கும்பிட்டு,  தன்னை ஆளாக்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்களையே மறந்து விட்டார்கள் என தெரிவித்தார்.