அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களானது தகுதி தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தகுதி தேர்வு மட்டுமே இருந்து வந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை  வழங்கப்பட்டது. தற்போது நியமன தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அதாவது போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நியமன தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தான் பணியின் நியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து பலரும் மனுதாக்கல் செய்து வருகிறார்கள். கடந்த 2014 வருடம் நடத்தப்பட்ட தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு படிந்தும் இன்னும் நியமனம்  வழங்கப்படவில்லை. லட்ச கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாத குறித்து அரசு விரிவான பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.