திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இஸ்லாமிய சொந்தங்களுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன். தேர்தலின் போது….  வாக்குப்பதிவின்போது….  100 விழுக்காடு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்க வர வேண்டும். 2024 தேர்தலில் மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தில் நாம் சந்திக்கிற தேர்தல்…  வாழ்வா ? சாவா ? என்கிற ஒரு போராட்டத்தை சந்திக்கின்ற  ஒரு தேர்தல்.

மீண்டும் தப்பி தவறி பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை ? இந்த நாட்டு மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அவர்கள் எடுத்து எடுப்பிலேயே அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள். சனாதன தருமத்தை… வருணாஸ்வர தருமத்தை…  மனு தருமத்தை  மீண்டும் அரசமைப்புச் சட்டம் என்று பிரகடனப்படுத்துவார்கள்.

அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்து விடுவார்கள்… தேர்தல் மீண்டும் வராது… ஆபத்தான தேர்தல்… இஸ்லாமிய ஆண்களின் வாக்களிப்பதை போல, பெண்கள் வாக்களிக்க வருவதில்லை என்கிற நிலை இருக்கிறது. தயவு கூர்ந்து… ஒரு தோழமையோடு நான் வேண்டுகோள் விடுகிறேன்கிறேன்….

கிருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன்கிறேன்.  தேர்தலில் நூறு விழுக்காடு  ஆண்கள் – பெண்கள் என்று அனைவரும்…..  வெளிநாடுகளில் இருக்கிற அனைவரும் தேர்தலின் போது ஊருக்கு வரவேண்டும்…  உண்மையிலேயே நீங்க மோடியை ஆட்சியில் இருந்து விரட்ட விரும்பினால், ஒருவர் கூட தேர்தலின் போது வெளிநாட்டில் இருக்க கூடாது. ஒருவரும் வீட்டிலே தங்கக் கூடாது. 100 விழுக்காடு  வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.