செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இருந்த பெயரை மாத்திட்டு இப்ப ”இந்தியா” என்று பெயர வச்சிருக்காங்க. பெயர்கள் வேண்டுமானால் மாறலாம். நீங்க சொல்ற மாதிரி,  காட்சிகள் தான் மாறுது – ஆட்சி தான் மாறுதே ஒழிய,  மக்கள் நிலை எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது தான் உண்மை.

ஏன்னா… இன்னைக்கு பாருங்க டெல்டா பகுதியில் இருந்து எங்க மாவட்ட செயலாளர்கள் எவ்வளவு பேர் வந்திருக்காங்க. இன்றைக்கு ஐந்தரை லட்சம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் இந்நேரம் விட்டிருக்கணும். ஆனால் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கூட இந்த தமிழக அரசாங்கம் பெற்று தர முடியவில்லை. ஏற்கனவே நமது தமிழகம் விவசாய பூமி.

இன்னைக்கு தண்ணி இல்லாம எல்லா பகுதியும் வறண்டு போய் கிடக்கு. இன்னும் வரும் காலம் இதைவிட மோசமாக இருக்கும் என்பதெல்லாம் மாற்று கருத்து இல்லை. இன்னைக்கு எல்லா விலைவாசியும் சிந்தித்து பார்க்கணும்…

இன்னைக்கு தக்காளியை பத்தி எல்லாம் சொல்றாங்க. தக்காளியை பத்தி.. வெங்காயத்தை பத்தி… சின்ன வெங்காயம்….  காய்கறி விலைகள் இதெல்லாம் உயர்வதற்கு காரணம் என்ன ? இங்க வேண்டிய தண்ணீர் இருந்து,  விவசாயம் சிறப்பாக இருந்தால் நிச்சயமாக இதற்கெல்லாமே நாம தீர்வு காண முடியும். உண்மையாக மக்களுக்கு தீர்வு காண வேண்டிய அரசு, மற்றவர்கள் மீது குறை சொல்லி – மற்றவர்கள் மீது பழி போட்டு தப்பிச்சுக்கனும்னு தான் நினைக்கவில்லையே ஒழிய,

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன ? அப்படிங்கறதெல்லாம் யாருமே யோசிக்கல. அதனால இன்னைக்கு ”இந்தியா” என்று அவங்க ஒரு கூட்டணி அமைச்சி இருக்கலாம். ஆனால் இந்தியா முழுக்க அந்த கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்கு உள்ளேயே பலவிதமான முரண்பாடான கருத்துக்கள் இருக்கின்றது. இந்த கூட்டணி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா ? ஜெயிக்குமா ? என்பதை தேர்தல் முடிவுகள் நிச்சயமாக நமக்கு உணர்த்தும்.

நீங்கள் சிறிய கட்சிகள் என்று சொல்பவர்கள் எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள். ஆனால் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணிகளோ – அதிமுக கூட்டணியிலோ – திமுக கூட்டணியிலோ இல்லை. இன்னைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எங்கள் கட்சியினுடைய பணிகளை மட்டும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் தேர்தலுக்கு இன்னும் ஆறு – ஏழு மாதம் இருக்கு. நிச்சயமாக தேமுதிக உறுதியான நல்ல ஒரு முடிவை எடுக்கும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்போ இந்த நிமிடம் நீங்க கேட்கிற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. நிச்சயமாக எங்களுடைய கட்சியின் வளர்ச்சி…. எங்களுடைய எதிர்காலத்தை கருதி, நிச்சயம் கேப்டன் அவர்கள் நல்லதொரு முடிவை எடுப்பாங்க. அது உங்களுக்கு அறிவிக்கப்படும். அது தேசிய ஜனநாயக கூட்டணியா ? அல்லது வேற கூட்டணியா ? என்பதை நாங்கள் இப்போ சொல்ல முடியாது. வருங்காலங்களில் தேர்தலுக்கு முன்னாடி  உறுதியாக அறிவிப்போம் என தெரிவித்தார்.