ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது இளம்பெண் ஒருவர் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சிராக் யாதவ் என்ற பணியாளர் அதிகாலை 4 மணி அளவில் ஐசியூவிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்தப் பெண் சத்தம் போடாமல் இருக்க அவருக்கு மயக்க ஊசியும் செலுத்தியுள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு அந்தப் பெண் தனது கணவரிடம் கூறிய நிலையில் அவர் புகார் அளிக்க போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது