ஐஸ்லாந்தில் தென்மேற்கு பகுதியில் எரிமலை வெடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஏற்கனவே ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்திருந்த நிலையில் இன்று காலை எட்டு மணி அளவில் மீண்டும் எரிமலை வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பு கிரின்டாவிக் பகுதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இது ஐந்தாவது எரிமலை வெடிப்பு என்று கூறப்படுகிறது. “இந்த எரிமலை வெடிப்பால் எந்த உயிருக்கும் ஆபத்து இல்லை, இருப்பினும் உள்கட்டமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம்” என்று ஐஸ்லாந்து ஜனாதிபதி குய்னி ஜோஹன்னெசன் X வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.