ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் யார் ஏர்வேஸுக்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்று காலை 63 பயணிகளுடன் சப்போரோவில் இருந்து புறப்பட்டு டொயமாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானி அறையில் இருந்த விமானத்தின்

ஜன்னலில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் மீண்டும் விமானத்தை சப்போரோ விமான நிலையத்திற்கு திருப்பினர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.