பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் லட்சத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருந்ததை விமர்சித்து மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மூன்று அமைச்சர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பேசு பொருளானது.

பலரும் மாலத்தீவுக்கு செல்ல போட்ட திட்டங்களை ரத்து செய்தனர். விமான முன்பதிவு டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டது. ஹோட்டலில் செய்யப்பட்ட முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஐந்து நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றிருந்தார்.

அங்கு சீனா மாலத்தீவுக்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய அவர் மறைமுகமாக இந்தியாவை தாக்கும் வகையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அவர் “நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால் அது எங்களைக் கொடுமைப்படுத்த உரிமை வழங்குவது ஆகாது” எனக் கூறியுள்ளார்.