அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேபிட் இன்க் லாஸ் வேகாசில் நடந்த சிஇஎஸ் 2024 நிகழ்ச்சியில் தன்னுடைய புதிய செய்தி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து போட்டியாளர்களை மிரள வைத்துள்ளது. கையடக்க கருவி ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கையடக்க கருவி மூலமாக குரலைக் கொண்டு பல வேலைகளை செய்து விடலாம். இந்த குட்டி கருவியுடன் நீங்கள் எனக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல ஒரு கார் வேண்டும், அப்படியே வீட்டிற்கு ஒரு பிரியாணி ஆர்டர் செய்துவிடு, அதோடு நான் விளையாட வரவில்லை என்று என் நண்பர்களிடம் சொல்லிவிடு என்று சொன்னால் மட்டும் போதும். உங்களுடைய ஊபர் கணக்குக்குள் சென்று உங்கள் முகவரிக்கு ஒரு காரை அதுவே புக் செய்யும்.

உங்களுக்கு விருப்பமான கடையில் பிரியாணி ஆர்டர் செய்து விட்டு முகவரிக்கு அனுப்பி விடவும். உங்களுடைய நண்பருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி விடவும். பெரும் குரல் வழி கட்டுப்பாடு மட்டுமல்லாமல் இதில் உள்ள 360 கோணங்களில் திரும்பக் கூடிய கேமரா மூலமும் பார்க்க செய்கின்றது. இந்த கேமராவை ஆன் செய்து சமையலறையில் காய்கறி கூடையை காட்டி இதை வைத்து என்ன சமைக்கலாம் என்று கேட்டதும் இருக்கும் பொருள்களை வைத்து என்ன செய்யலாம் என்று சமையல் குறிப்புகளை வழங்கும். மேலும் இதற்கு புதிய வேலைகளையும் நாம் கற்றுக் கொடுக்கலாம். இந்திய மதிப்பில் இதன் விலை 16 ஆயிரத்து 500 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிம்கார்டு பொருத்தும் வசதியும் ப்ளூடூத் மற்றும் வைபை வசதிகளும் உள்ளன.