13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் 32வது பகுதி கலாச்சார நினைவு சின்னங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இந்த சீனப் பெருஞ்சுவரை உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அறிவித்தது.

இந்நிலையில் சீன ஓவியரான குவோ ஃபெங் என்ற பெண் கலாச்சார நினைவு சின்னமான சீனப் பெருஞ்சுவரின் மீது உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார். “காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி” என்ற தலைப்பை மையமாக வைத்து சீனப் பெருஞ்சுவரின் மீது அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக 1014.37 மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் ஓவியத்தை வரைந்து உள்ளார்.

இதனால் உலகின் நீளமான ஓவியத்தை வரைந்ததாக இவரது பெயர் உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான காணொளியை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

https://www.instagram.com/reel/C1-WtgbBad9