
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர்களின் தரவரிசையை நேற்று வெளியிட்டது. அதன்படி, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி முதல் பந்துவீச்சாளர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அவர் அதிரடியாக முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் பேட் கம்மின்ஸ் 3வது இடத்தில் உள்ளார். ஜடேஜா 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் அஸ்வின் உள்ளார். அக்சர் படேல் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வீரர்கள் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷாக்னே முதலிடத்திலும், இந்தியாவின் ரிஷப் பந்த் 6வது இடத்திலும், ரோஹித் சர்மா 7வது இடத்திலும் உள்ளனர்.
Ravindra Jadeja ✅
Ravichandran Ashwin ✅
Axar Patel ✅All-rounders domination 🇮🇳#RaviAshwin #RavindraJadeja #AxarPatel #India #INDvsAUS #ICCRankings #Cricket pic.twitter.com/2olWKOoVDI
— Wisden India (@WisdenIndia) February 22, 2023