ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்..

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் மற்றும் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார்கள். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஆஷ்டன் அகர் விலகியுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்தியா திரும்புவதில் சந்தேகம் எழுந்துள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்த ஸ்டீவ் ஸ்மித் தயாராக வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4  போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ்  மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி 2:0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி இந்தூரில்  மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது..