சென்னை ராயப்பேட்டையில் உமா மகேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நடை பயிற்சிக்காக வெளியே சென்றார். அவர்கள் இருவரும் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஒரு வீட்டிலிருந்து வெளியே வந்த நாய் உமா மகேஸ்வரியை 2 முறை கொடூரமாக கடித்தது. வலி தாங்க முடியாமல் அலறிய உமா மகேஸ்வரியை அவருடைய கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து உமா மகேஸ்வரி நாயின் உரிமையாளர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நாயின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.