நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

மணக்க வரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது!
தமிழகத்தின தமிழ்த் தெருவில்
தமிழ்தான் இல்லை!
என்று வருந்திப்பாடிய எங்கள் புரட்சி பாவலன் இறந்து பல ஆண்டுகள். அதன் பிறகு பிறந்து வந்தான் பேரன் நிறைவேற்றிடு தான் போவான்.
முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்!
மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்!
தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்!
திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்!
இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்!
இந்திய – நாவலந் தேயத்து இறைமையர்!
என்ன வியப்படா? – இவர்கள் தமிழர்கள்!
என்னினும் என்ன, வியப்படா..

இவர்கள் தமிழர்கள். இதிலேயே  பாட்டு முடியல. ஆயினும் என்ன இன்று இவர்கள்  அடிமைகள். நம்முடைய தாத்தா பாவலரேறு” பெருஞ்சித்திரனார் இல்லை..

இன்னரும் இயல், இசை, நாடகம் யாத்தவர். இந்திய நாவலன் தேர் இறைமை  இவர்கள் அடிமை இல்லை. திசையெல்லாம் ஆழ்ந்து உலகை ஆண்டவர் அடிமை இல்லை. தாத்தா நாங்கள் அடிமை இல்லை.  உரிமை பெற்ற தமிழ் தேசியத்தின் மக்கள் குடிகள் என்று மீள இருக்கிற வாய்ப்பு நாம் தமிழர் ஆட்சி மலர்கிறபோவதுதான் அது நிறைவேறும்.

அவன் வருந்தி பாடினான்… நமது தாத்தாக்கள்.. நாம் அடுத்த தலைமுறை பிள்ளைகள் திருந்தியதை திருத்தி, வரலாற்றை திருப்பி எழுதுறோம்.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட இனத்தின் மக்கள், ஒரு நாள் தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதுவார்கள் என்று… வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்,  எம் இனத்தின் வரலாற்றை எழுதி வைத்து விட்டு தான்,  வரலாற்றில் வழிச் சுவடுகளை வருங்கால தலைமுறை பிள்ளைகளுக்கு போட்டு வைத்து விட்டு தான் போவோம். சும்மா போக மாட்டோம் என தெரிவித்தார்.