கர்நாடகாவில் உள்ள மங்களூரு மாவட்டத்தில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு செல்லும் போது, ஜூமர் (24) என்ற வாலிபர் பின் தொடர்ந்து உள்ளார். இவர் தொடர்ச்சியாக அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் ஜூமரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூமருக்கு ஓராண்டு சிறை தண்டனையும்,ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.