ஓபிஎஸ் உங்களை காத்திருக்க காத்திருக்கிறார். நீங்க எப்போது அப்பாயின்மென்ட் கொடுப்பீங்க ? என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, எங்க அவரு கட்சி காருங்க அவரெல்லாம். விருந்தாளியாங்க அவுங்க. இப்போ நீங்க திமுகவிலிருந்து ஒருத்தர் காத்துகிட்டு இருக்காங்க,  அவரை கொஞ்சம் முன்னாடி பாருங்க. இப்ப உங்க வீட்ல ஒரு திருமணம்.  அதுக்கு உங்க சொந்தக்காரங்க… அக்கா புள்ள,  மாமா புள்ள,  எல்லாம் வராங்க. அவங்கள போய் முன்னாடி  நீங்க சாப்பாடு வைக்கணும்ன்னு  அவசியமில்லை.

வெளியில உள்ள பிரெண்ட்ஸ் வர்றவங்களை,  கூப்பிட்டு முன்னாடி கவனித்து அனுப்புங்க. அதே மாதிரிதான் எங்களை பொறுத்த வரைக்கும்,  எங்கள் ஆட்கள் எல்லாரையும் சரி பண்ண முடியும்,  அந்த கெப்பாசிட்டி எனக்கு இருக்கு. அதை நான்  பெருமைக்காக சொல்லல. எனக்கு அந்த அனுபவம் இருக்கு. எந்த சமயத்துல,  என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் ? ஓபிஎஸ் எப்ப வேணாலும் என்னை வந்து சந்திக்கலாம். எந்த தடையும் கிடையாது.

நாடளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுமா ?  இந்திய கூட்டணி வெற்றி பெறுமா என்பது பப்ளிக் உடைய மனசை  பாக்கணும். அதை வச்சி தான் சொல்ல முடியும். தனிப்பட்ட முறையில் இந்த சர்வேயில் சொல்லுற மாதிரி எல்லாம் சொல்ல முடியாது. என்னுடைய ஆதரவு கூடிய சீக்கிரம் தெரிஞ்சிப்பீங்க.அரசியலில் அனுபவத்தோட பேசுவது என்று ஒன்று இருக்கிறது. அந்த மாதிரி அனுபவம் இல்லாமல்   ஒரு குழந்தை மாதிரி இருக்கு நாம  என்னத்த சொல்ல முடியும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என தெரிவித்தார்.