2026-ம் ஆண்டின் கார்ப்பரேட் கலாச்சாரம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது. வழக்கமான ‘பார்மல்’ வார்த்தைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு ஜென் ஜி ஊழியர் தனது மேலாளருக்கு அனுப்பிய விடுப்பு விண்ணப்பம் இப்போது பேசுபொருளாகியுள்ளது.

“அலுவலக அழுத்தம் காரணமாக எனது உடல்நலமும், சருமமும் பாதிக்கப்படுகிறது. எனவே, எனக்கு ஏப்ரல் 28 முதல் மே 1 வரை 4 நாட்கள் விடுமுறை வேண்டும்” என்று அந்த ஊழியர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

அதுமட்டுமின்றி, தான் ஆவலோடு எதிர்பார்க்கும் ‘The Devil Wears Prada 2’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவும், ‘மெயின் கேரக்டர்’ மொமெண்ட்டை அனுபவிக்கவும் இந்த ஓய்வு தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் “நிச்சயம் திட்டு விழப்போகிறது” என நினைத்த வேளையில், அவரது மேலாளர் வெறும் நான்கே வார்த்தைகளில் “Okay, approved bestie” எனப் பதிலளித்து ஒட்டுமொத்த இணையத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

“வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க இதுபோன்ற புரிதல் உள்ள மேலாளர்கள் தான் தேவை” என ஒரு தரப்பினர் பாராட்டினாலும், “தொழில்முறை எல்லைகள் மீறப்படுகிறதோ?” என மற்றொரு தரப்பினர் விவாதித்து வருகின்றனர்.