தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…. ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலை தொடர்பாக உரிய விளக்கங்களை இந்த மாமன்றத்திற்கு நான் முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டு சிறைவாசிகளில் பத்து ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணை நோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், 

தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோரின் நிலையை மனிதாவிமான அடிப்படையிலே கருத்தில் கொண்டு ஆராய வேண்டும் என்பதற்காக தான் மாண்புமிகு  சென்னை உயர்நிதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நிதி அரசர் திரு N ஆதிநாதன் அவர்கள் தலைமையின் கீழ் 6 பேர் அடங்கிய ஒரு குழு 22.12.2021இல் இந்த அரசால் அமைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் வழக்குகளை ஆராய்ந்தும், அவர்களின் முன் விடுதலைக்குரிய பரிந்துரை வழங்க எதுவாகவும்,  இக்குழு அரசால் அமைக்கப்பட்டது. இந்த குழு தன்னுடைய அறிக்கையினை 28.10.2022 அன்று அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையில் 264 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மட்டுமே குழுவால் முன் விடுதலைக்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

அதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய 115வது பிறந்த நாளினை முன்னிட்டு,  ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு முன் விடுதலை செய்வதற்கு பரிசீலனை செய்யும் பொருட்டு,  11.8.2023 அன்று முதற்கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு,  தொடர்புடைய கோப்புகள் 24.8.2023 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளன.

அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவார்கள். மாண்புமிகு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டவுடன்,  அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார் என்பதை இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ஓய்வு பெற்ற மாண்புமை உயர்நிதிமன்ற நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீதமுள்ள ஆயுள் தண்டனை சிறைக்கைதிகள் விடுதலை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

சிறைக்கைதிகளின் முன் விடுதலை தொடர்பாக அரசின் சார்பாக…  மேலும் சில கருத்துக்களை இந்த அவையின் முன் வைக்க நான் விரும்புகிறேன். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்,  பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா,  சிறுபாண்மை மக்களுடைய பாதுகாப்பு அரணாக விளங்கிய நம்முடைய தமிழ் இன தலைவர் கலைஞர் ஆகியோர் வழியில் என்றென்றும் செயல்பட்டு இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசின் சார்பில், 

நான் 13.9.2021 ல் அறிவித்தவாறு பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய 113வது பிறந்த நாளை முன்னிட்டு சிறையில் நீண்ட கால சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை குறைத்து,  மனிதாவிமான அடிப்படையிலே குறைத்து,  முன் விடுதலை செய்ய உரிய ஆணைகள் பிறப்பிக்கபட்டன என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதேபோல் அறிவுரை கழம்   (அட்வைசர் போர்ட்) அந்த அறிவுரை திட்ட கழகத்தின் கீழ் 14 ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கும்…  மருத்துவ காரணங்கள் மற்றும்  நீதிமன்ற ஆணைகளின் படி 15 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும் ஏற்கனவே முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   அந்த வகையில் 566 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் பரிசீலனை செய்யப்பட்டு,  8.10.2023 வரை 335 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 9 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவர். இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை. அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை தோற்றத்தை ஏற்படுத்த பாக்கிறார்கள். அது போலியானது. இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக முறைப்படி தமிழ்நாடு அரசு உரிய வகையில நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை இந்த அவைக்கு தங்கள் மூலமாக தெரிவித்து கொள்ளுகிறேன்

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… இங்கு மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் மிகுந்த அக்கறையோடு,  இந்த பிரச்சனையை எடுத்து பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் முன் விடுதலை பற்றி அதிமுக பேசுகிற பொழுது…  நான் கேக்குற ஒரே கேள்வி…  நீங்கள் பத்து ஆண்டு கால ஆட்சியில இருந்தப்போ கண்ணை மூடி கொண்டிருந்ததற்கு என்ன காரணம் ? அதை நான் இப்பொழுது அறிய விரும்புகிறேன் என தெரிவித்தார்.