
இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் விமானத்தை ஒரு பெரிய காந்தத்தின் உதவியால் நிறுத்த முயற்சிக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வேலைக்காக துபாய்க்கு செல்ல வேண்டும் என்பதற்காக, விமானம் பறக்கத் தொடங்கியதும் அதன் வால் பகுதியில் கயிற்றுடன் இணைக்கப்பட்ட காந்தத்தை எறிந்து, விமானத்தை தன் வசம் இழுக்கும் காட்சியுடன் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
இதைப் பார்த்த பைலட் கதவைத் திறந்து வெளியே பார்த்தபோது, ஒரு நபர் கயிற்றை பிடித்துக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். அவர், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, “துபாய் வேலைக்கு போகணும், பாஸ்போர்ட், வீசா இல்லை” என்றார் அந்த நபர். இந்த வீடியோ, பாகிஸ்தானில் உள்ள இளைஞர்களின் வேலை இல்லாத நிலையை கிண்டலாக வெளிப்படுத்துகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கேலியாக கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். மேலும் ஒரு பயனர், “அலுமினியம் எப்போ முதல் காந்தத்துடன் ஒட்ட ஆரம்பிச்சுது?” என்ற கேள்வியை எழுப்பி நகைச்சுவையாக விமர்சித்துள்ளார். பிப்ரவரி 6ஆம் தேதி பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பல லட்சம் பார்வைகளை குவித்து வைரலாகியுள்ளது.