தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வெள்ளித் திரையிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வேலை இல்லா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நடிகை ரேஷ்மா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் போன்ற சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேஷ்மாவிடம் ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு நடிகை ரேஷ்மா எனக்கும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தான். ஆனால் அதற்கு என்னுடைய அம்மா சம்மதிக்க மாட்டார் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை ரேஷ்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.