கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 3-ம் தேதி மிக்ஜாம்  புயல் மாலையில் வந்தது. அப்போ கனமழை பொழிந்தது. அடுத்த நாள் 4ஆம்  தேதி மதியம் வரைக்கும் தொடர்ந்து மழை பெய்தது. ஆங்கங்கே வெள்ளம் எல்லாம் தேங்கி இருந்தது. 3 நாள் கழிச்சு தான் அதிகாரிகளே  உள்ளே  போனாங்க. எல்லா பத்திரிக்கையும் தெரியும்.

நாலாம் தேதி இரவு தலைமைச் செயலாளர் சொல்றாரு….  இப்பதான் தேங்கிய நீரை….. சென்னையில் ஆங்காங்கே தேங்கிய நீரை…. சென்னை புறநகர் பகுதி  மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று மாவட்டம் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேங்கிய நீரை அகற்றுவதற்காக என்எல்சி நிறுவனத்திடம் இருந்து ராத்ச்ச மின் மோட்டாரை கொண்டு வருவோம் என்று சொல்கிறார். அதுவரைக்கும் எந்த ஒரு முன்னேற்பாடும் பண்ணவில்லை. எந்த அதிகாரியும் ஆய்வு செய்யல…

அங்க போய் என்ன மழை பாதிப்பு என்று கூட பார்க்கவில்லை. ஆனால் 5ஆம் தேதி டிஆர் பாலு நாடாளுமன்றத்தில் பேசுறாரு. என்ன நிவாரணம் கேட்கிறார் ? எவ்வளவு…. 6250 கோடி.  ஆய்வு செய்யாம எப்படி நிவாரணம் கேட்க முடியும் ? சொல்லுங்க பாக்கலாம்… பத்திரிகையாளர் ஊடக நண்பர்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிப்பது…. அதிகாரிகளும் போகல… தண்ணீரும் விடியவில்லை…

எப்படி சேதத்தை மதிப்பிட முடியும். ஆக இதெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு….  ஏதோ மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஒரு சம்பிரதாயத்துக்காக…. மக்களுக்காக அல்ல….  விளம்பரம் வேணும் அப்படிங்கறதுக்கு தான் டி.ஆர் பாலு எம்பி அவர்கள் நாடாளுமன்றத்திலே மத்திய அரசிடம் இருந்து  எங்களுக்கு 6250 கோடி ரூபாய் பெரு வெள்ளம் ஏற்பட்டு சேதம் அடைந்திருப்பதாக கேட்கிறார். எந்த சேதத்தையும் கணக்கிடாம,  இந்த தொகை எப்படி கேட்க முடியும் ? ஒரு மாநில அரசாங்கம்….. மத்திய அரசிடம் தொகை கேட்க வேண்டும் என்று சொன்னால்,  நானும் முதலமைச்சராக இருந்தேன்.

இன்றைக்கு தண்ணீர் வடிந்த பிறகு என்னென்ன வகையில் சேதம் ஏற்பட்டுள்ளது ? மக்களுக்கு என்ன சேதம் ? அரசு பல்வேறு துறைகள் மூலமாக என்ன சேதம் ஏற்பட்டிருக்கிறது ? விவசாயிகளுக்கு என்ன சேதம் ?  பயிர்களுக்கு என்ன சேதம் ?  மின்கம்பங்கள் எத்தனை சேதம் ?  இன்னைக்கு எத்தனை சாலைகள் சேதம் ?  பல்வேறு பிரச்சனைகளிலும் ஆய்வு செய்து….  அந்த அதிகாரி மூலமாக….. ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி தேவை ?

வெள்ளத்தால் எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது ? என்பதை கணக்கிட்டு அதற்கு பிறகு கேட்டிருந்தால் கொடுப்பாங்க. இப்ப எதுவுமே கணக்கெடுக்காத இந்த அரசு….  வேண்டுமென்றே திட்டமிட்டு விளம்பரம் படுத்துவதற்காக இன்றைக்கு நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு அவர்கள் தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் 6250 கோடி அளவுக்கு சேதம் அடைந்துள்ளது என்று கேட்டிருப்பது என்பது விந்தையாகவும்,  வேடிக்கையாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.