செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர் எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட எப்ப வந்தார்னு எனக்கு தெரியாது எனக்கு.
சொல்லப்போனால் ஜெயலலிதாவை பாத்தீங்கன்னா…. ஜெயலலிதா தான் எனக்கு நன்றி கடன்பட்டவரே தவிர, நான் ஜெயலலிதாவுக்கு நன்றி கடன் பட்டது கிடையாது. நான் காப்பாற்றியதால் தான் பொதுச்செயலாளர் ஆனார்கள். நான் காப்பாத்தினால்தான் முதலமைச்சர் ஆனார்கள். நான் காப்பாத்தியதால் தான் இவங்க எல்லாம் மந்திரியா இருந்து சாப்பிட்டு சௌக்கியமா இருக்காங்க.
அப்ப ஜெயலலிதா எனக்கு நன்றியா இருக்கணுமா? இல்லை நான் ஜெயலலிதாவுக்கு நன்றியா இருக்கணுமா… அதனால ஜெயலலிதாவுக்கு நான் நிறைய நல்லது பண்ணி இருக்கேன். ஜெயலலிதா எனக்கு நிறைய கெடுதல் தான் பண்ணி இருக்காங்க. முடிஞ்சு போன விஷயம்…. அந்த அம்மா இயற்கை எய்திட்டாங்க. அவங்கள பத்தி சொல்ல விரும்பல. பிரச்சனை எனக்கும் – ஜெயக்குமாருக்குமா பிரச்சனை. ஏன் என்னை திட்டிட்டு கிடக்குறாங்க. சம்பந்தம் இல்லாம பேசிட்டு கிடக்குறாங்க என தெரிவித்தார்.