ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குச்சமான் நகரில் ஒரு செல்போன் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு மாணவிகள் சிலர்  ரீசார்ஜ் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் தவறான அணுகு முறையில் மாணவிகளிடம் பேசினார். அதாவது அந்த மாணவிகளிடம் முதலில் ஐ லவ் யூ என சொல்லுங்கள். அதன் பிறகு ரீசார்ஜ் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கோபம் அடைந்த மாணவிகள் அந்த நபரை நடுரோட்டில் வைத்து கன்னத்தில் பளார் விட்டனர். அவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்தனர். உடனடியாக அந்த இடத்தில் கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் உதவியுடன் அந்த கடைக்காரரை காவல் நிலையத்தில் மாணவிகள் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.