தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாகவும், நடிகை திரிஷா ஹீரோயினாகவும் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தனக்கு பிடித்த திரையுலக பிரபலங்கள் பற்றி பேசியுள்ளார். அவர் தனக்கு நடிகர் ரஜினி மற்றும் நடிகர் அஜித் ஆகியோரை மிகவும் பிடிக்கும் எனவும் கண்டிப்பாக அவர்களுடன் சேர்ந்து  படம் பண்ணுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று சிறுவயதிலிருந்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் பிரபல ஒளிப்பதிவாளர் பிவி ஸ்ரீ ராம் ஆகியோரையும் ரொம்ப பிடிக்கும். அதனால் அவர்களுடன் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் ரஜினியின் கடைசி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது அஜித்தை ரொம்ப பிடிக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளது தல ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் மற்றும் தல அஜித் இணைந்து ஒரு படம் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.