தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இயக்குனர் சங்கர் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகியோர் நடுக்கடலுக்குள் செல்லும்போது எடுக்கப்பட்ட அன்சீன் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நண்பன் திரைப்படத்தில் நடித்தார். இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. நண்பன் படத்தின் சூட்டிங் சமயத்தில் இயக்குனர் அட்லி, சங்கர், நடிகர் விஜய் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடுக்கடலில் படகில் சென்றுள்ளனர். மேலும் அவர்கள் நடுக்கடலில் படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.