டைரக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக கொண்டு தயாராகி வரும் படம் “ஆதிபுருஷ்”. பிரம்மாண்டம் ஆக உருவாகும் இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்களானது இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்து இருக்கின்றனர்.

தமிழ் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக  உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த வருடம் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்திலுள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் “ஆதிபுருஷ்” படத்திலிருந்து ஜெய் ஸ்ரீராம் எனும் பாடலை கொண்ட மோஷன் போஸ்டரை படக்குழு இப்போது வெளியிட்டு உள்ளது. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.