தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் டாப் ஹீரோயினாக ஜொலித்தவர் மீனா. இவருடைய கணவர் வித்யாசாகர் இறந்த பிறகு தோழிகள் மீண்டும் மீனாவை பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். நடிகை மீனா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நிலையில் அண்மையில் பிரபல யூட்யூப் சேனல் நடிகை மீனா சினிமாவில் 40 வருடங்களை நிறைவு செய்ததை மீனா 40 என்ற பெயரில் விழாவாக நடத்தியது. இந்த விழாவின் போது மீனாவின் மகள் நைனிகா பேசிய வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் என்னுடைய அம்மா குழந்தை நட்சத்திரமாகவும் ஒரு நடிகையாகவும் சாதித்தவர். என்னுடைய அப்பா இறந்த பிறகு எனக்கு தெரியாமல் என் அம்மா பலமுறை அழுதுள்ளார். நான் என் அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்வேன். இப்போது  இல்லாவிடில் எதிர்காலத்தில் என் அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்வேன். என்னுடைய அப்பா இறந்த பிறகு பல யூ டியூப் சேனல்களில் என் அம்மா குறித்த தவறான செய்திகள் வெளிவந்தது. என் அம்மா ஒரு நடிகையாக இருந்தாலும் அவரும் ஒரு ஹியூமன் தான். எனவே இது போன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என நைனிகா உருக்கமாக கேட்டுக்கொண்டார். மேலும் இந்த வீடியோவை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் கண்கலங்கினார்.