தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். அதன் பிறகு கஸ்டடி படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நாக சைதன்யாவிடம் ஒரு பேட்டியின் போது நீங்கள் எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்கள் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் நாக சைதன்யா நான் நிறைய பேருக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். நான் இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்வதில்லை என கூறியுள்ளார். மேலும் நாக சைதன்யாவின் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.