கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கொன்னத்தடி புதியபரம்பிலை சேர்ந்த லீலா ஜோஸ் என்ற மூதாட்டி, தனது மகனுடன் சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு, தாயின் கனவை நிஜமாக்கும் விதமாக, 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும் அனுபவத்தை மகன் ஏற்பாடு செய்தார். தாயாருக்கு இது முழுமையான சர்ப்ரைஸ் ஆக இருந்தாலும், எந்தவித பயமுமின்றி அவர் வானில் பறந்தார். “நான் மேகங்களுக்குள்ளேயே பறந்தேன்… அது ஒரு வாழ்க்கையை மாற்றும் அனுபவம்” என லீலா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த மனதை நெகிழச் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 70 வயதிலும் தைரியத்துடன் ஸ்கை டைவ் செய்த லீலாவின் தன்னம்பிக்கைக்கும், தாயின் கனவை நிறைவேற்றிய மகனின் அன்புக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.