என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இளைஞரணி மாநாடு தலைவர் யாருன்னா ? அன்பின் மகேஷ் பொய்யாமொழி… அண்ணன் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன்.. தமிழ்நாட்டில் 18 வயதிற்கு உள்ளே இருக்கக்கூடிய குழந்தைகள் பள்ளியில் இருந்து பாதியிலே பள்ளியில் படிப்பை நிறுத்திவிட்டு வெளியே போகிறவர்கள் 1 லட்சத்து 34,000 பேர்.

அப்படி என்றால் தமிழ்நாட்டில் போன ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் ஐந்தாவது படித்துவிட்டு ஆறாவது போகவில்லை.. 6ஆம் வகுப்பு படித்துவிட்டு 7ஆம் வகுப்பு போகல… பத்தாவது படித்துவிட்டு 11வது போகவில்லை….  18 வயதிற்கு கீழ் 1 லட்சத்து 34,000 பேர் பள்ளி படிப்பை  பாதியில்  விட்டிருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் மட்டுமே 3467 குழந்தைகள் பாதியில் படிப்பை நிறுத்தி உள்ளார்கள். அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

என்ன பண்ண வேண்டும் ? கர்மவீரர் காமராஜர் ஐயாவாக இருந்தால், என்ன பண்ணியிருப்பார்கள் ? அந்த குழந்தை வீட்டுக்கு போய்… அங்கு உட்கார்ந்து…. ஏன் கண்ணு நீ பள்ளி படிப்பிற்கு போகவில்லை என கேட்பார் ? அந்த குழந்தை சொல்லும்… சாப்பாடு போடவில்லை என்று… அதற்காக துவங்கப்பட்டது தான் மதிய உணவு திட்டம். காமராஜர் ஐயாவாக இருந்தால் இதை பண்ணிருப்பார்.

அன்பின் மகேஷ் பொய்யாமொழி என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார் ? பைக் எப்படி ஸ்டார்ட் பண்ணுவது ? என்று சொல்லிக் கொடுத்து….  எல்லா கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை டிசம்பர் 17 வரை வருகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டினுடைய அமைச்சர்கள். இவர்களிடம் இருந்தால் விளங்கும் என விமர்சனம் செய்தார்.