புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, நாம் கடவுளாக மாற வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாங்கள் கடவுளாகி விட்டோம் என்று நாமே கூற முடியாது என்று அவர் கூறினார்.

அமைதியாக இருப்பதற்கு பதிலாக சிலர் மின்னலைப் போல பிரகாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் மின்னல் வெட்டி முடித்த பின்பு மீண்டும் இருள் ஆகிவிடும். அதனால் சேவகர்கள் தீபத்தை போல பிரகாசித்து தேவைப்படும்போது ஒளிர வேண்டும் என்று கூறினார்.