சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில விஷயங்கள் ட்ரெண்டாவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் ‘ஹஸ்கி டான்ஸ்’ என்ற ஒரு புதிய நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘வெடி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இச்சு இச்சு’ பாடலுக்கு, ஒரு ஹஸ்கி நாய் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி இணையத்தில் வெளியாகி, அனைவரையும் கவர்ந்திழுத்தது. இதனையடுத்து, பலரும் அதே பாணியில் நடனமாடி, காணொளிகளை வெளியிட்டு இந்த ட்ரெண்டில் இணைந்தனர்.
#Drishyam3 | Mom (Meena) & Daughter (Esther) 💃
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 14, 2025
இந்நிலையில், இந்த ‘ஹஸ்கி டான்ஸ்’ ட்ரெண்டிங்கில் முன்னணி நடிகை மீனாவும் தற்போது இணைந்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து மீனா நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், நடிகைகள் மீனாவும் மற்றும் எஸ்தர் அனிலும் சேர்ந்து இந்த ‘ஹஸ்கி டான்ஸ்’ ஆடியுள்ளனர். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ‘த்ரிஷ்யம் 3’ படத்தில் மோகன்லால், மீனா, ஆன்சிபா ஹசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
