
பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது வளரும் ஐந்து சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகள் ஆகும். நடப்பாண்டு ஜனவரி மாதம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இணைந்துள்ளன. தற்பொழுது 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இதனால் மோடி டெல்லியில் இருந்து ரஷ்யா சென்றுள்ளார். அங்கு ரஷ்ய அதிகாரிகள் பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் அவரை சந்திக்க வந்த இந்திய வம்சாவளியினருடன் சிறிய கலந்துரையாடல் நடத்தினார். அதன் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த மோடி கைகுலுக்கி அவரைக் கட்டி தழுவி தங்களது அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.