
சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம்:
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம், 29.03.2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் பணியிடங்கள்:
இதில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அதோடு 20,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.
இலவச சேவைகள் மற்றும் பயிற்சிகள்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் முகாமில் வழங்கப்படும்.
தகுதிகள்:
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதி உள்ளவர்கள். ITI, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்களும் தகுதியானவர்கள்.இந்த முகாமில் பங்கேற்பது இலவசம்.
முன்பதிவிற்கான இணையதளம்:
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login பகுதியில் தங்களது சுயவிபரங்களை முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.