விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே… உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இது ஒரு வரலாற்று நிகழ்வு. நம்முடைய இயக்க வரலாற்றில் இது ஒரு மைல்கள். மைல்கள் என்றால் ? நடந்து போகின்ற பொது ஒரு கிலோமீட்டர் தள்ளி,  பத்து கிலோமீட்டர் தள்ளி ரோட்டில் ஒரு போஸ்ட் வச்சி இருப்பாங்க. நாம் மைலேஜ் பார்ப்பது.

இன்னும் எத்தனை கிலோமீட்டர் திருச்சி இருக்கு. 220 கிலோ  மீட்டர்… கொஞ்ச துயரம் போனால் 210 கிலோ மீட்டர் என இருக்கும் அந்த கல்லுக்கு பெயர் மைல்கல். ஒரு தூரத்தை நாம் கடந்து இருக்கிறோம் என்பதை அடையாளப்படுத்துகிற ஒன்று.  இந்த இயக்கம் பத்தாண்டு காலம் தேர்தலை புறக்கணித்தது. 1999இல் தான் இது தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்தது.

முறைப்படி தேர்தல் ஆணையத்தில் நாம் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்தது 2002ல்தான்.  1999 இல் தேர்தலில் நின்றோம்,  ஆனால் பதிவு செய்யப்பட்ட கட்சி அல்ல. 2001இல் தேர்தலில் பங்கேற்றோம், ஆனால் அப்போதும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல.

தமிழ்நாட்டி8 ல் இடங்களிலும்,  புதுச்சேரியில் 2 இடங்களிலும் அப்போது நாம் போட்டியிட்டோம்.  மங்களூர் என்கின்ற இன்றைய  திட்டக்குடி தொகுதியில் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது கட்சி அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாமல் இருந்தது. சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு தான் முறைப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று தேர்தல் ஆணையத்தில் நாம் பதிவு செய்தோம்.

அதிலிருந்து கணக்கெடுத்துக் கொண்டால் ? இன்றைக்கு 21 ஆண்டுகளை நாம் தொட்டு இருக்கிறோம். தேர்தல் அரசியலில் அடி எடுத்து வைத்ததை கணக்கெட்டால் ? 25 ஆண்டுகளை நாம் தொட்டிருக்கிறோம். இது வெள்ளி விழா ஆண்டு. பல தேர்தல்களை நாம் சந்தித்து விட்டோம். 1999,  2001, 2004, 2006, 2009, 2014, 2011, 2014, 2016, 2019, 2021.

இதற்கிடையிலே உள்ளாட்சித் தேர்தல் வேறு. இவ்வளவு தேர்தல்களை நாம் சந்தித்திருக்கிறோம் என்றாலும் கூட,  தேர்தலுக்கான அடிப்படை பணியை இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம். தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதை புரிந்து கொள்வதற்கு எனக்கே 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. இதை  வெளிப்படையாக நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்  தெரிவித்தார்.