எள் சாகுபடியில் பயிறு மேலாண்மையை முறையாகப் பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம் என திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, எள் பயிரானது எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும் முக்கியமான மற்றும் பாரம்பரியமான ஒன்றாக விளங்குகிறது. இது தொடர் பயிருக்கும், கலப்பு பயிருக்கும் மற்றும் தனி பயிருக்கும் ஏற்றதாகும். எள்ளானது நிலத்தடியில் மீதமுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியினை தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டதாகும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்து சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மை படுத்த வேண்டும்.

அதன் பின் 20 கிலோ மணல் அல்லது 20 கிலோ எருடன் கலந்து விதைப்பது நல்லது. எள்லை பொருத்தவரை தண்ணீர் தேவை அதிக அளவில் இல்லை. மேலும் செடியை வாட விட்டு தண்ணீர் கட்டினால் இலை குறைந்து காய் அதிகமாக காய்க்கும். அதே போல் மாணவரி பயிருக்கு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படுகிறது. இரவை என்றால் ஒரு ஏக்கருக்கு மூன்று கிலோ விதை தேவைப்படும் 100 கிராம் அசோஸ்பைரெல்லாம் 100 கிராம் சூடாமோனஸ் போன்றவற்றுடன் விதைகளை சேர்க்க வேண்டும். அதேபோல் வடித்த கஞ்சியை ஆறவைத்து அதில் விதை கலவையை கலக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 30 கிலோ பொட்டாசியம் என்ற அளவில் உரமிட வேண்டும்.

மேலும் 60 கிலோ சூப்பர் பாஸ்பேட், எட்டு கிலோ இட வேண்டும். இந்நிலையில் விதைத்த 15 முதல் 20 நாட்களுக்கு களை எடுக்க வேண்டும். முதல் களை எடுத்ததிலிருந்து 15 நாட்கள் கழித்து அடுத்த களை எடுக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிர் மேலாண்மையை முறையாக பின்பற்றினால் அதிகமாக மகசூல்  பெற்றுக் கொள்ளலாம். மேலும் வைப்பூர், தப்பாலம் புலியூர், திருவாரூர், பின்னவாசல் ஆகிய வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் விதை இருப்பில் இருக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.