நடிகர் கமல்ஹாசனின் சமீபத்திய படங்களான இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் RKFL இண்டர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படமாக இருக்கும் என்று சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படம் குறித்து கமல்ஹாசன் சமீபத்திய சைமா விருது விழாவில் உறுதிப்படுத்தியுள்ளார், இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Trisha: Kamal sir, How are you always so Hot, So Dapper❓#KamalHaasan reaction 😂♥️pic.twitter.com/e5Y6h4gafO
— AmuthaBharathi (@CinemaWithAB) September 8, 2025
அதே விழாவில், நடிகை திரிஷா கமல்ஹாசனைப் பற்றி பேசிய வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. திரிஷா, நடிகர் கமலைப் பார்த்து, “எப்படி சார் இத்தனை வருடங்களாக இவ்வளவு ஹாட்டாக, கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கீங்க?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்து அளித்த ரியாக்ஷன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சம்பவம் கமலின் இளமை தோற்றத்தையும், அவரது தனித்துவமான ஆளுமையையும் மீண்டும் ஒருமுறை பேசு பொருளாக்கியுள்ளது.
