நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனிருத் இசையமைப்பில், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், வரும் 11-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வெற்றி, லோகேஷின் இயக்கத்தில் ரஜினியின் மாஸ் நடிப்பை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்து பேச்சு எழுந்துள்ளது.
கமலின் RKFL இண்டர்னேஷ்னல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், இரு வயதான கேங்ஸ்டர் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைக்களமாக இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய சைமா விருது விழாவில் இதனை உறுதிப்படுத்திய கமல்ஹாசன், “நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டியது முன்பே நடந்திருக்க வேண்டும். வியாபார ரீதியாக இதுவரை இணையவில்லை. இப்போது அதற்கான சரியான சூழல் உருவாகியுள்ளது,” என்று கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
